மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி.. மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மின்சாரம் தாக்கி பலி.!
செங்கல்பட்டு மாவட்டம், திருவாத்தூர் பகுதியில் லலிதா - வெங்கடேசன் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பசு மாடுகளை வளர்த்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் லலிதா பசு மாடுகளை மேய்ச்சலுக்கு வயலுக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது வயலில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியில் கால் வைத்துள்ளது. இதனால் 4 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லலிதா மற்றும் வெங்கடேசன் கதறி அழுதுள்ளார்கள். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து அணைக்கட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மின்வாரிய துறையின் கவனகுறைவே இந்த விபத்திற்கு காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் மின்சாரம் தாக்கி 4 மாடுகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.