மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைக்கு வரும் பள்ளி சிறுமிகளுக்கு மளிகை கடைகாரர் பாலியல் தொல்லை.! வெளியே சொல்ல தயங்கிய மாணவிகள்.! தலைமை ஆசிரியர் அதிரடி
பொள்ளாச்சி அருகே ஆனைமலையைச் சேர்ந்தவர் நடராஜ். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதை சிறுமிகள் யாரிடமும் சொல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் தலைமையில் பாலியல் பாதுகாப்பு குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட சிறுமிகள் தலைமை ஆசிரியரிடம் நாங்கள் வசிக்கும் பகுதியில் மளிகை கடைக்காரர், எங்களிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார்.
தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மளிகை கடைக்காரர் நடராஜனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 9 பிரிவுகளிலும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.