கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! அதிர்ச்சி காரணம்!

சென்னை திநகர் ராமானுஜம் தெருவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் உள்ளது. சென்னையில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப் படை உதவி ஆய்வாளர் சேகர் இன்று மாலை சுமார்5 மணியளவில் திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து தனக்குத்தானே நெற்றியில் சுட்டுக் கொண்டார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காவல் அதிகாரி சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்ஐ சேகரின் உடல் அருகில் கிடந்த பிஸ்டல் ரக துப்பாக்கியை கைப்பற்றினர்.
தடயஅறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். அப்போது அங்கு எஸ்ஐ சேகர் தன் கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் தான் வீடு கட்டுவதற்காக ரூ. 25 லட்சம் கடன் வாங்கியதாகவும், பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் போய்விடுமோ என மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் சேகர் எழுதியுள்ளார். இச்சம்பவம் சக போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.