மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய வளர்ப்பு தந்தை.. இரண்டாவது திருமணம் செய்து நடந்த பயங்கரம்.!
கணவரை இழந்து 7 குழந்தைகளோடு வசித்து வந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த நபர், மனைவியின் 15 வயது மகளை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய சோகம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூரை சேர்ந்தவர் வெள்ளையன். இராமேஸ்வரம் பகுதியில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்த வெள்ளையன், பனியின் போது செய்த தவறால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கே மீண்டும் வந்துள்ளார்.
வெள்ளையனின் முதல் மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிடவே, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் கணவரை இழந்து 4 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகளோடு வசித்து வந்த பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இவர்கள் திருவில்லிபுத்தூரில் வசித்து வந்த நிலையில், வெள்ளியின் வேலை இல்லாத காரணத்தால் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையில், அவரின் வளர்ப்பு மகளான 15 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, அவரின் தாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், குழந்தைகள் நலத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெள்ளையனின் அதிர்ச்சி செயல் உறுதியாகவே, காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளையனை கைது செய்தனர்.