#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்ளஸ்-2 மாணவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: காதலிக்க தூண்டிய ஆசிரியை அதிரடி கைது..!
சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் உயர்கல்வி பயில கல்லூரியில் சேர காத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி கிருஷ்ணகுமார் சென்னை, மாநில கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் கலந்து கொண்டார். பின்னர் மாலை வீடு திரும்பிய அவர் தனது வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அம்பத்தூர் காவல்துறையினர் சந்தேக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் அம்பத்தூர் பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்ததும், அப்போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்ற ஆசிரியயை உடன் மாணவருக்கு காதல் மலர்ந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இதற்கிடையே சர்மிளாவிற்கு அவரது வீட்டில் திருமண வரன் பார்த்து வந்துள்ளனர். இதன் காரணமாக அவர் மாணவருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவருக்கு நிச்சயமும் முடிந்துவிட்டதால் மாணவனுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் தற்கொலை ஸ்ய்து கொண்டுள்ளார். மாணவரின் செல்ஃபோனை ஆய்வு செய்டஹ் காவல்துறையினரின் விசாரணையில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில், ஆசிரியயை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.