புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
#Breaking: "நான் சான்றளித்த நல்ல மனிதர்" - டிஐஜி விஜயகுமார் தற்கொலையால் உச்சகட்ட மனவேதனையில் சைலேந்திரபாபு..!
கோவை டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் இன்று காலை தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழக காவல்துறையினர் மட்டுமின்றி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் விஜயகுமார் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
கோவை டிஐஜி திரு சி. விஜயகுமார் அவர்களின் மரணம் அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் அளிக்கிறது. சிறந்த அதிகாரி, நல்ல...
Sylendra Babu IPS இடுகையிட்ட தேதி: வியாழன், 6 ஜூலை, 2023
இந்த நிலையில், விஜயகுமாரின் தற்கொலையை அறிந்து மன வருத்தம் அடைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, தனது முகநூல் பக்கத்தில் "விஜயகுமாரின் தற்கொலை தன்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நல்ல மனிதர், சிறந்த அதிகாரி அவர். கடந்த வாரம் அவருக்கு பாராட்டு சான்றிதழ் அளித்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.