வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவு பெற்று ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. கடந்த 2020 முதல் தற்போது வரை 3 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நடிகர் மரணம்
இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நேத்ரன். இவர் பாக்கியலட்சுமி மட்டுமல்லாது பல சீரியல்களிலும் நடித்து வந்தார். இதனிடையே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட நேத்ரன் உயிரிழந்த சம்பவம் திரை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Baakiyalakshmi: "நான் கல்யாணமே பண்ணிருக்ககூடாது" - கலங்கிபோன ராதிகாவுக்கு ஆறுதல் கூறும் பாக்கியா.!
வில்லன் கதாப்பாத்திரம்
வில்லன் தொடர்பான கதாபாத்திரங்களில் அதிகம் நடித்திருந்த நேத்ரன், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் முக்கிய நடிகராகவும் இருந்து வந்தார்.
புற்றுநோய் பாதிப்பு
மேலும் அவருக்கு திருமணம் முடிந்து தீபா என்ற மனைவியும், அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தவர் தற்போது பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல்நலக்குறைவால் மரணம்
இவர் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவுக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில மாதங்களாகவே இவர் தொடர்பான காட்சிகள் இடம்பெறாத நிலையில், தற்போது அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ள சோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Silk Smitha: நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கைப்படம்; அட்டகாசமான கிலிம்ப்ஸ் வீடியோ உள்ளே.!