சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
"1/2 பவுன் தங்கத்துக்கு உயிர் போச்சே.." குழந்தை பிறந்த ஒன்றரை மாதத்தில் தாய் படுகொலை.!! இளைஞர் கைது.!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தை பிறந்த 45 நாட்களில் தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்து விசாரித்ததில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இரண்டாவது குழந்தை பிரசவம்
புதுக்கோட்டை மாவட்டம் புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் ரகுமான். இவரது மனைவி சகுபர் நிஷா(24). இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் 45 நாட்களுக்கு முன்னர் சகுபர் நிஷாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தனது பெற்றோர் வீட்டிலிருந்த அவர் சில தினங்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்.
கத்தியால் குத்தி படுகொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் மாமியார் வீட்டிலிருந்த சகுபர் நிஷா கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சகுபர் நிஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது கணவர் ரகுமானை கைது செய்தனர்.
இதையும் படிங்க: மது பழக்கத்தால் கொடூரம்... மனைவி கழுத்தறுத்து படுகொலை.!! கணவன் தற்கொலை.!! வில்கிய மர்மம்.!!
விசாரணையில் வெளியான உண்மை
இந்நிலையில் முதலில் மனைவியை குடும்பப் பிரச்சனையில் கொலை செய்ததாக கூறிய கணவர் பின்னர் காவல் துறைக்கு பயந்து வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ரகுமானின் பக்கத்து வீட்டில் வசிக்கும் முகமது அபு என்ற நபர் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்ததில் சகுபர் நிஷா அணிந்திருந்த 1/2 பவுன் நகைக்காக அவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: முகம் சிதைந்த சடலம்... அதிர்ச்சியில் பொது மக்கள்.!! நடந்தது கொலையா.? காவல்துறை விசாரணை.!!