#Breaking: சென்னை, விழுப்புரம், அரியலூர் உட்பட 13 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கனமழை காரணமாக அறிவிப்பு.!



tamilnadu-heavy-rain-14-districts-announcement-leave-sc

 

கடலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர் உட்பட 13 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் என ரெட் அலர்ட், மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

tamilnadu

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (நவ.11) கனமழை முன்னெச்சரிக்கையாக விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

tamilnadu

இந்த நிலையில், இன்று மேற்கூறிய மாவட்டங்களை தவிர்த்து அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் ரமணா சரஸ்வதி விடுமுறைகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி - காரைக்கால் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு உத்தரவிப்பட்டுள்ளது..