மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கல் பரிசு ரூ.1000 விவகாரம்; ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தப்பிதவறியும் இதை செஞ்சிடாதீங்க.!
தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை ஒரு கிலோ, கரும்பு அடங்கிய தொகுப்பானது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பிற்காக டோக்கன் கொடுக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், அந்தந்த ரேஷன் கார்டுகளுக்கு என ஒதுக்கிய ரேஷன் கடையில் மட்டுமே பொங்கல் பரிசு தொகப்பானது வாங்க முடியும் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகப்பில் ரூபாய் 1000 ரொக்க பணம் கொடுப்பதன் காரணமாக, அந்தந்த ரேஷன் பணியாளர்கள் அவர்களின் பதிவேட்டின் படி ரொக்க பணத்தை எடுத்து வருவார்கள் என்பதால், பிற ரேசன்கடை பயனர்களுக்கு அந்த பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.
இதனால் அந்தந்த பயனர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகள் நடைபெறும் வாய்ப்பும் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.