மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும் சோகம்... வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு...
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஆசிரியர் அன்னாள் ஜெயமேரி (53). தற்போது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு நடைப்பெற்று வருகிறது. ஜெயமேரி அந்த பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'எமிஸ்' எனும் கல்வித்துறை செயலி வாயிலாக, காலாண்டு தேர்வை நடத்தி விவரங்களை பதிவு செய்துள்ளார்.
ஆனால் தேர்வு முடிந்த பிறகு ஜெயமேரி பதிவு செய்த விவரங்கள் செயலியில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மற்றொரு ஆசிரியையிடம், பதற்றத்துடன் கேட்ட அடுத்த நொடியே மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். செயலியில் பதிவு செய்த விவரங்கள் இல்லாததால் பதற்றம் அடைந்து பெண் ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பள்ளிக்கல்விதுறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.