மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 ஆம் வகுப்பு மாணவனுடன் கள்ள உறவு..!! ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது..!!
பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகேயுள்ள வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவி ( 40). திருமணமானவர். இவர் பாடாலூர் அருகேயுள்ள துறையூர் பகுதியில் இயங்கிவரும் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவரும் இவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக தேவி துறையூர் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மேலும் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகளும் நடத்தி வந்துள்ளார். இவரிடம் டியூஷன் வகுப்பில் படித்து வந்த 10 ஆம் வகுப்பு மாணவருடன் நெருக்கமாக இருந்துவந்ததாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் மாணவனுடன் செல்ஃபோனில் நீண்ட நேரம் பேசிவந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த மாணவனின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், தங்களது மகனை கண்காணிக்க தொடங்கினர். இரவில் நீண்ட நேரம் ஆசிரியை தேவியுடன் தங்களது மகன் செல்ஃபோனில் பேசிவருவதை கண்டறிந்தனர். இதனையடுத்து மாணவனிடம் விசாரித்த போது இருவரும் பாலியல் உறவு கொண்டதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆசிரியை தேவி மீது முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல்துறையினர், ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.