#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொத்துக்காக தம்பியை கொடூரமாக அறிவாளால் வெட்டிய அண்ணன்..!! பகீர் சம்பவம்..!!
களக்காடு அருகே சொத்து பிரச்சனையில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் இருக்கும் கீழப்பத்தை தெற்கு தெருவில் வசித்து வருபவர் விவசாயி ராஜா (46). இவருக்கும் இவரது அண்ணன் ரத்தினக்குமார்(50) என்பவருக்கும் பூர்வீக சொத்தை பங்கு பிரிப்பதில்ண தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று ராஜா அவரது வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரத்தினக்குமாருக்கும், ராஜாவுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரத்தினக்குமார், ராஜாவை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ராஜா சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து களக்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ரத்தினக்குமாரை தேடி வருகின்றனர்.