மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்..!! துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்..!! பர பர நிமிடங்கள்..!!
டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இன்று அதிகாலை அங்கு வந்த இருவர் டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களை வளைத்து பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கொள்ளையர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில், மணி என்பவர் தொடையில் குண்டு பாய்ந்ததால் அங்கேயே சுருண்டு விழுந்தார். மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடினார். வலியால் துடித்த கொண்ளையன் மணியை பிடித்த காவல்துறையினர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குண்டு அகற்றப்பட்டதுடன் கொள்ளையன் மணிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்னையடுத்து தப்பிச்சென்ற மற்றொரு கொள்ளையனை தேடி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈஎடுபட்டுள்ளனர் அதிகாலை நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.