#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விடுமுறை பிரச்னை: ஆயுதப்படை எஸ்ஐ-யை கத்தியை காட்டி மிரட்டிய காவலர்.!
விருதுநகரில் விடுமுறை பிரச்னை தொடர்பாக ஆயுதப்படை எஸ்.ஐ.யை கத்தியை காட்டி மிரட்டிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை பணி அத்தியாவசியத் சேவையின் கீழ் வருவதால் சரியான விடுமுறை தினத்தை நிர்ணயிக்க முடியவில்லை என சமீபத்தில் தமிழக டிஜிபி சார்பில் கூடுதல் ஐஜி மகேஷ்வரன் கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் அதிகநேரம் நேரம் பணியாற்றும் காவலர்களுக்கு சரியான விடுமுறை வேண்டும் என அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் விருதுநகரில் விடுமுறை பிரச்னை தொடர்பாக ஆயுதப்படை உதவி ஆய்வாளரை கத்தியை காட்டி மிரட்டிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயக்குமார். அதே பிரிவில் ஆயுதப்படை காவலராக பணிபுரியும் மாயக்கண்ணன் என்பவர் விடுமுறை பிரச்னை தொடர்பாக கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆயுதப்படை காவலர் மாயக்கண்ணன் கைது செய்யப்பட்டர்.