மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் மாயம்; வடிவேலு காமெடி பாணியில், காவல் நிலையத்தில் திமுக பரபரப்பு புகார்..!
திமுகவினர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தமிழகம் வந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, மதுரையில் 95 விழுக்காடு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடைந்ததாக தெரிவித்தார்.
இதனை சர்ச்சையாக்கிய எதிர்க்கட்சிகள் ஐந்து விழுக்காடு பணிகள் கூட நிறைவு பெறாத எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு நிறைவு பெற்றது?. 95 விழுக்காடு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை. நேரில் வந்து பலமணிநேரம் தேடிவிட்டோம் என்று கூறி கலாய்த்து இருந்தது.
இந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணும் என்ற காமெடி பாணியில், புதிதாக கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.