#Breaking: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை; இன்று 3 மணியோடு மாணவர்களை வீட்டிற்கு அனுப்ப உத்தரவு.!



Thiruvallur District administration Announce Leave for Tomm School due To Rain 

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் இறுதிக்கட்டத்தில் காரணமாக, பல்வேறு புயல்கள் வங்கக்கடல் பகுதியில் உருவாகி தொடர் மழையானது பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்து சென்றுள்ளது. 

அதனைத்தொடர்ந்து, மேலும் 3 புயல்கள் தமிழகத்தில் மழைபொழிவை ஏற்படுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி, மெக்கா புயல் உருவாகி விரைவில் அது தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. 

rain

இதனால் இன்று உட்பட அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று காலை முதலாகவே திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (டிச, 13) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார். 

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மாலை 3 மணிக்கு மூட உத்தரவிட்டுள்ள ஆட்சியர், இன்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு திரும்பிவிட்டதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.