மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்டப்பஞ்சாயத்து ரௌடி 3 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை; திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, சிருபுழல்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் நாகராஜ் (வயது 30). சம்பவத்தன்று இவர் அங்குள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் நடைபெற்ற குடும்பத்தகராருக்கு கட்ட பஞ்சாயத்து செய்ய வந்ததாக கூறப்படுகிறது.
உள்ளூரில் ரவுடியாக இருந்து வந்த நாகராஜின் மீது பல வழக்குகளும் இருப்பதால் சட்ட விரோத செயல்களில் அதிகளவு ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில சம்பவத்தன்று மூன்று பேர் கொண்ட கும்பலால் நாகராஜ் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் நாகராஜின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.