#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அன்னபூரணி அரசம்மன் திருக்கோவில் கட்ட பூமிபூஜை நிறைவு; தமிழ்நாட்டில் புதிய அம்மனாக உருவெடுப்பு.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியில் தற்காலிக ஆசிரமம் வைத்து, தற்போதைய ஆன்மீக முறைகளை தவறானவை எனக்கூறி, புதிய சக்தி வழிமுறையை கையில் எடுத்துள்ளவர் அன்னபூரணி.
இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து, அரசு என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அரசு உயிரிழந்துவிட்ட நிலையில், தன்னை சக்தியின் அவதாரம் என்று கூறி தற்போது அன்னபூரணி அரசு அம்மாவாக வலம்வருகிறார்.
இவரை நேரில் சந்திக்க வரும் பலரும் ஆசி வழங்கி வரும் நிலையில், இவரைப்பற்றி பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளால் தற்போது எந்த செய்தி நிறுவனத்திற்கும் பேட்டி அளிக்காமல், அவரது இருப்பிடத்திற்குள் அனுமதி வழங்காமல் தனக்கு தானே முகநூல் மற்றும் யூடியூப் பக்கம் வாயிலாக பேசி வருகிறார்.
இந்த நிலையில், இவர் இன்று தனது கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ அவரின் சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியாகியுள்ளது. அவரிடம் பலரும் நேரில் வந்து ஆசி வாங்கி சென்றனர்.