அரசுப்பணியாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. என்னென்ன? விபரம் இதோ.! 



TN Govt Employees TN Budget 2025 

 

2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், மொத்தமாக 932 இடங்களில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அடுத்த 25 ஆண்டுகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று பல்வேறு புதிய திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் வரும் காலத்தில் செயல்படுத்தப்படும் என்பதால், அதனை எதிர்பார்த்து மக்களும் காத்திருக்கின்றனர். குறிப்பாக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து இருந்தனர். அதில் முக்கியமான ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: சைடு கேப்பில் சபாநாயகருக்கு ஆப்பு வைத்த அதிமுக; "நம்பிக்கையில்லா தீர்மானம்" - விவாதத்துக்கு ஏற்பு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

அதாவது, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலின்போது, அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு முறைகள் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

40000 பணியிடங்கள் நிரப்பப்படும்

அதன்படி, 15 நாட்கள் வரை பழைய முறையில் இனி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுப்பது, நீட்டிப்பது போன்றவற்றை ஈட்டிய விடுமுறையில் பெற்றுக்கொள்ளலாம். இனி வரும் நாட்களில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 40000 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 

அரசு பணியாளர்களின் விபத்து காப்பீடு, உயிர்காப்பீடு ரூ.1 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. பணியில் ஊழியர் இறந்தால், கருணை தொகை ரூ.10 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப்பணியாளர்களின் குழந்தைகளின் திருமணக்கடன், கல்விக்கடன் போன்றவற்றிலும் மானியங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சைதாப்பேட்டையில் ரூ.110 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: #BigBreaking: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் அம்பலம் - அமலாக்கத்துறை அறிவிப்பு.!