திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: அதிகனமழை எச்சரிக்கை எதிரொலி; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் 06ம் தேதி வரை மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், நாளை முதல் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களுக்கு மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிககனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.