மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தக்காளியின் விலை திடீர் உயர்வு; கிலோ ரூ.70 க்கு விற்பனை.!
புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்தே, பலரும் வீடுகளில் அசைவத்தை தவிரித்துவிட்டு, சைவ உணவுகளை அதிகம் நாடத் தொடங்கியதால், காய்கறிகளின் விலை என்பது தொடர்ந்து உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.
கடந்த மாதம் ரூ.20 க்கு விற்பனை
கடந்த மாதம் வரையில் தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.20 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே, வடமாநிலங்களில் பெய்து வந்த மழை, உள்ளூரில் விளைச்சல் குறைவு போன்ற காரணங்களால் தக்காளியின் விலை உயரத் தொடங்கியது.
இதையும் படிங்க: காதல் திருமணம் நடந்த 7 ஆண்டுகளில் துயரம்: பலபெண்களுடன் கணவன் நெருக்கம்; மனைவி விபரீதம்..!
சென்னையில் ரூ.70 க்கு தக்காளி விற்பனை
இந்நிலையில், சென்னையில் கிலோ தக்காளியின் விலை ரூ.35 க்கு கடந்த வாரம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், பிற மாவட்டங்களிலும் தக்காளியின் விலை என்பது ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை முன்னிட்டு அதன் விலை மேலும் உயரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை: வைகை எக்ஸ்பிரஸ் இரயில் - நடைமேடை இடையே சிக்கி துள்ளத்துடிக்க உயிரிழந்த இளைஞர்; பதறவைக்கும் காட்சிகள்.!