#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"ஒரே தொந்தரவு முடிச்சி விட்டுருவோம்.." கள்ள காதலனுடன் தாய் போட்ட பக்கா ஸ்கெட்ச்.!! மனைவி உடந்தை.!!
திருச்சியில் மது போதையில் தகராறு செய்து வந்த மகனை பெற்ற தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து நூதனமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட நபரின் தாய், கள்ளக்காதலன், மனைவி உட்பட 5 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது போதையில் தகராறு
திருச்சியை சேர்ந்தவர் குணசேகரன்(34). இவரது மனைவி சுலோசனா(30). இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் குணசேகரனின் தாயான காமாட்சியுடன் திருச்சி சஞ்சீவி நகரில் உள்ள வடமல்லி தெருவில் வசித்து வருகின்றனர். குணசேகரன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இதனால் தினமும் மது குடித்து விட்டு வந்து தனது தாய் மற்றும் மனைவியுடன் பிரச்சனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்ததால் கொடூரம்; இளம்பெண் மீது சரமாரியாக தாக்குதல்., பதறவைக்கும் காட்சி.!
தாய்க்கு கள்ளக்காதல்
இந்நிலையில் குணசேகரனின் தாய் காமாட்சிக்கு, விஜயகுமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தனது மகன் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னையும் மருமகளையும் கொடுமைப்படுத்துவது குறித்து தனது கள்ளக்காதலன் விஜயகுமாரிடம் தெரிவித்திருக்கிறார் காமாட்சி.
திட்டமிட்டு படுகொலை
இதனைத் தொடர்ந்து விஜயகுமாரின் உறவினர்களான திருநங்கைகள் நித்தியானி மற்றும் நெல்பியா ஆகியோரின் துணையுடன் குணசேகரனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை மது போதையில் வந்த குணசேகரன் வீட்டில் தகராறு செய்திருக்கிறார். இது தொடர்பாக காமாட்சி தனது கள்ளக்காதலன் விஜயகுமாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜயகுமார் நித்தியானி மற்றும் நெல்பியா ஆகியோர் காமாட்சியின் வீட்டிற்கு வந்து மது போதையில் இருந்த குணசேகரனின் உடலில் காற்று ஏற்றப்பட்ட சிரிஞ்சை செலுத்தி அவரது கழுத்தை துப்பட்டாவால் நெறித்து கொலை செய்துள்ளனர்.
அரங்கேறிய நாடகம்
குணசேகரன் இறந்ததை உறுதி செய்து கொண்ட காமாட்சி மற்றும் குணசேகரின் மனைவி ஆகியோர், குணசேகரன் மயங்கி விழுந்தது போல் நாடகமாடினர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது இறப்பில் சந்தேகம் இருந்ததால் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் குணசேகரன் சிரஞ்சியேற்றி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த திருச்சி கோட்டை போலீசார் குணசேகரனின் தாய் காமாட்சி, அவரது மனைவி சுலோச்சனா ஆகியோரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கொலை செய்வதற்கு உதவிய விஜயகுமார் மற்றும் 2 திருநங்கைகளும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: ஒரு வருடத்தில் கசந்த வாழ்க்கை... உயிரை பறித்த குடும்ப சண்டை.!! கணவன் தற்கொலை.!!