#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டிடிவி தினகரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி.! என்னாச்சு.?
அமமுக நிர்வாகிகளை சந்திக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் டிடிவி தினகரன் தஞ்சாவூர் சென்றார். நேற்று இரவு திடீரென அவருக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காண அமமுக நிர்வாகிகள் பலர் குவிந்துள்ளனர்.
இதுகுறித்து டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில், சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். 1/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 2, 2022
எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.