பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத செய்யலாமா..? டிடிவி தினகரன் கேள்வி.!
தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மதவழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மதுபான கடைகள் மற்றும் பப்புகள் போன்றவற்றுக்கான நேரக்குறைப்பு தொடர்பான பிற விஷயங்கள் குறிப்பிடப்படவில்லை.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதலமைச்சர் திரு.ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேவைப்பட்டால் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் திரு.ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்து படித்து பார்த்து கொள்ளலாம். 3/3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 5, 2022
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "நோய் பரப்பும் இடங்களாக செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக்கூடங்களையும்(Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது. தேவைப்பட்டால் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் திரு.ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்து படித்து பார்த்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.