மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசு இப்படி செய்யலாமா.!! மத்திய அரசின் செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்.!
கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவலால் பல்வேறு மாநிலங்களும் தவித்து வருகின்றன.
கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 21, 2021
இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.
இத்தகைய செயலினை எந்தக் காரணத்திற்காகவும் ஏற்க முடியாது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோல் கொரோனா தடுப்பூசியின் விலையை அவரவர் இஷ்டம்போல நிர்ணயிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.