முதல் யு வடிவ மேம்பாலம்.! இன்று திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்!!



U shaped flyover opened today in chennai

சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. அதனை தடுக்கும் வகையில் அரசு மேம்பாலங்கள் அமைப்பது போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 இந்த நிலையில் ஓஎம்ஆரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு, துரைப்பாக்கம், சோளிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

U shaped

மேலும் இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைட்டில் பார்க் பகுதியில் யு வடிவத்தில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த மேம்பாலம் 450மீ நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கட்டப்பட்டுள்ள முதல் யு வடிவ மேம்பாலமான இதனை இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக மக்களின் செயல்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்.