புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அட பாவமே... பீடி துண்டால் பறி போன உயிர்.!! முதியவருக்கு நேர்ந்த சோக முடிவு.!!
திருச்சியில் படுத்து கொண்டிருந்தபோது மெத்தையில் பீடித்துண்டு விழுந்து தீப்பிடித்ததால் முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீடி துண்டு விழுந்ததில் முதியவர் படுகாயம்
திருச்சியில் உள்ள தென்னூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(78). சர்க்கரை நோயாளியான இவருக்கு பீடி புகைக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு படுக்கையில் இருந்தபோது பீடி குடித்திருக்கிறார் மாரிமுத்து. அப்போது பீடியின் கங்கு மெத்தையில் விழுந்து தீப்பற்றியிருக்கிறது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனைத் தொடர்ந்து தீக்காயத்தால் அலறி துடித்திருக்கிறார் மாரிமுத்து. இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: "1/2 பவுன் தங்கத்துக்கு உயிர் போச்சே.." குழந்தை பிறந்த ஒன்றரை மாதத்தில் தாய் படுகொலை.!! இளைஞர் கைது.!!
காவல்துறை வழக்கு பதிவு
அவர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் இறந்த மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மது பழக்கத்தால் கொடூரம்... மனைவி கழுத்தறுத்து படுகொலை.!! கணவன் தற்கொலை.!! வில்கிய மர்மம்.!!