பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஓராண்டு காதல், ஒருநாள் உல்லாச வாழ்க்கையில் முடிவு; மாணவிக்கு தாலிகட்டி பலாத்காரம் செய்து எஸ்கேப்பான கயவன்..!
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, முகமதுபுரம் கெங்கையம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் விஸ்வநாதன் (வயது 23). இவர் வெல்டிங் தொழிலாளி ஆவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி குடியாத்தம் அருகே சிறுமியை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்று தாலிகட்டி விடுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின் மறுநாள் காலையில் விடுதியில் இருந்து சென்ற விஸ்வநாதன் மீண்டும் வராத நிலையில், பள்ளி மாணவி அங்கிருந்து வீட்டுக்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.
இந்த தகவலின் பெயரில் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே அதிகாரிகள் விஸ்வநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.