மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கைகளை இழந்த தந்தை குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்ததில் விபரீதம்; நீரில் மூழ்கி 2 பிஞ்சுகள் பரிதாப மரணம்..!
தனது குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்த தந்தையால் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், பேயம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் விபத்தில் கையை இழந்தவர் ஆவார். தற்போது கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார்.
சக்திவேலின் மனைவி மதன பிரியா. இவர் மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தம்பதிகளுக்கு முகுல் கிருஷ்ணா என்ற 8 வயது மகனும், வர்ஷனா ஸ்ரீ என்ற 6 வயது மகளும் இருக்கின்றனர்.
மதன பிரியா கணவரிடம் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு சென்ற நிலையில், சக்திவேல் தனது குழந்தைகளுக்கு நீச்சல் கற்று கொடுக்கிறேன் என விவசாய கிணற்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.
லாரி டியூபை பயன்படுத்தி 2 குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக்கொடுத்த போது, எதிர்பாராத விதமாக குழந்தைகள் நீரில் மூழ்கியுள்ளன.
ஒரு கைகளை இழந்த சக்திவேலால் குழந்தைகளை காப்பாற்ற இயலாத நிலையில், அருகே இருந்தோரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வருவதற்குள் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து போயின.
தகவல் அறிந்து வந்த இராஜபாளையம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கீழராஜகுலராமன் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.