96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மாணவர்களை கண்டித்த ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு: வகுப்பறையிலேயே 2 மாணவர்கள் துணிகர செயல்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 11 & 12ம் வகுப்பு பொருளாதார ஆசிரியராக கடற்கரை என்பவர் பணியாற்றி வருகிறார்.
10ம் வகுப்பு பயின்று தோல்வியடைந்து, பின் தனியார் பள்ளியில் சேர்ந்து தேர்ச்சிபெற்ற மகேஷ் (வயது 16), யுகேஷ் (வயது 16) என்ற இரண்டு மாணவர்கள், பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் வகுப்புக்கு அரசுப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
இருவரும் பள்ளியில் சேர்ந்த நாட்கள் முதல், சரிவர பாடத்தை கவனிக்காமல் இருந்துள்ளனர். இதனை கடற்கரை பலமுறை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், இன்று காலை ஆசிரியர் வகுப்புக்கு வந்ததும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
பதறிப்போன பிற மாணவர்கள் கூச்சலிட்ட, சக ஆசிரியர்கள் கடற்கரையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மாணவர்கள் - ஆசிரியரிடம் விசாரணை செய்து, திருத்தங்கல் காவல் துறையினர் விசாரணை நடத்த மனு அளித்தனர்.
புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.