அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
இளம் பெண்ணை கட்டிவைத்து அடித்த போலி சாமியார்!! அவ்வளவு வேதனையிலும் கணவனை காப்பாற்ற அந்த பெண் நடத்திய பாச போராட்டம்.!!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கோவிலில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்து அடித்து கொடுமை படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்பொன்விளை பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பெண் ஒருவர் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டு, அடித்து கொடுமை படுத்தப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய போலீசார், பெண் ஒருவர் கோவிலிலில் கட்டிவைக்கப்பட்டு அடித்து கொடுமை படுத்தப்படுவதை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் சேவிழை பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் வினோ என்பவரின் மனைவி அஜிதா என்பதும் தெரியவந்தது. எம்.எஸ்.சி., எம்.எட் படித்துள்ள அந்த பெண், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பேய் பிடித்துதுள்ளது என நினைத்த அவரது குடும்பத்தினர், அந்த பகுதியில் உள்ள பேய் ஓட்டும் நபரான போலிச்சாமியார் துரைராஜன் வீட்டிற்கு அழைத்துசென்றுள்ளன்னர்.
அந்த நபர், அந்த பெண்ணை அங்குள்ள கோவில் ஒன்றில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்து, பிரம்பால் அடித்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போலீசார், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் கணவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.
அப்போது அந்த பெண் அங்கிருந்து எழுந்து ஓடிவந்து குழந்தை போல கணவனை கட்டி பிடித்து அவரை விட்டுவிடுங்கள் என்று கண்ணீர் மல்க பாச போராட்டம் நடத்தியது காவல் துறையினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கிய போலீசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் போலி சாமியாரான துரைராஜ் மீது ஏற்கனவே குளச்சல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.