இனி ஆட்டோவுக்கு பேரம் பேச தேவையில்லை! கூகிள் மேப்பில் புதிய வசதி அறிமுகம்



new-feature-for-auto-fares-in-google-map

கூகிள் மேப் ஆப்பில் ஆட்டோவுக்கான வழித்தடமும், அதற்கான தொகையும் காட்டும் வகையில் புதிய வசதியானது கூகிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ ட்ரைவர்களிடம் பேரம் பேச வேண்டிய அவசியம் ஏற்படாது.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அவசரமாக செல்ல மக்கள் உடனடியாக தேடுவது ஆட்டோவை தான். சில சமயங்களில் அதனை ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகமான தொகையை வசூலிக்கும் நிலைமை ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசால் பல திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.

auto driver

இந்நிலையில் கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள செயலியான கூகிள்  மேப்பில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியானது முதல் முதலாக நேற்று முதல் தலைநகரான டெல்லியில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த புதிய வசதியின் மூலம் ஆட்டோவில் பயணிப்பவர்கள் தாங்கள் செல்லும் வழித்தடத்தை முன் கூட்டியே தெரிந்துகொள்ளலாம். மேலும் அந்த பயணத்திற்கு ஆகும் தொகையும் பயனாளர்களுக்கு முன்கூட்டியே அந்த செயலியில் காட்டப்படும். 

இதற்காக கூகிள் நிறுவனம் "public transport mode" என்ற புதிய மோடினை கூகிள் மேப்பில் அறிமுகம் செய்துள்ளது கூகிள் நிறுவனம். அந்த செயலியில் காண்பிக்கப்டும் தொகையானது டெல்லி போக்குவரத்துக்கு துறையால் அங்கீகரிக்கப்பட்ட தொகையாகும்.

auto driver

இந்த புதிய வசதியை குறித்து விளக்கம் அளித்துள்ள கூகுள் மேப் மேனேஜர் விஷால் தத்தா, "இந்த திட்டமானது பொது போக்குவரத்து முறைகளில் வசூலிக்கப்படும் தொகையினை மக்களுக்கு வெளிப்படையாக காட்டும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் பயணிக்கும் பொதுமக்கள் தாங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோம், அதற்கான சரியான தொகை எவ்வளவு என்பதை தெரியாமலே இருந்துவிட்டனர் இனி அதைபோன்று நடக்காது. 

auto driver

இனி மக்கள் பயணம் செய்வதற்கு முன்பாகவே தங்கள் பயணத்திற்கு ஆட்டோவில் செல்ல எவ்வளவு செலவாகும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்கள் ஆட்டோவில் செல்லலாமா இல்லை வேறு ஏதேனும் முறையில் செல்லலாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்" என்று விளக்கமளித்துள்ளார்.

தற்பொழுது டெல்லியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முறையானது இந்தியா முழுவதும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.