திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
விராட் கோலி அவுட் ஆனதால் மாரடைப்பில் இறந்தாரா 14 வயது சிறுமி.?! தந்தை வெளியிட்ட தகவல்.!

தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. கடந்த வருடம் டி20 உலக கோப்பை தொடரை வென்ற நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபியை வென்று தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஐசிசி கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.
இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரயன்ஷி என்ற 14 வயது சிறுமி இறுதிப்போட்டி நடந்த நாளில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கிறார். விராட் கோலி இந்த மேட்சில் விளையாடிய போது அவுட் ஆனதை பார்த்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தான் அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க: இளைஞருடன் பேசுவதை தந்தை கண்டித்ததால் விரக்தி; 19 வயது இளம்பெண் தற்கொலை.!
இந்த நிலையில் இது பற்றி அவரின் தந்தை அஜய் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது பெண் உயிர் இழந்த நேரத்தில் கோலி பேட்டிங் செய்ய களத்தில் கூட இறங்கவில்லை. என் மகள் இறந்தது எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்டது தான்." என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டையில், சமாதானத்துக்கு வந்த தாய் கொடூர கொலை.. மகன் வெறிச்செயல்.!