தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
காதலர் தினத்தன்று புதிய முயற்சி! 10 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் உறுதிமொழி எடுக்க முடிவு
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பல பிரச்சனைகளும் நடந்துவருகிறது. தற்போதைய வாழ்க்கை முறையில் காதலர் தினத்தன்று நடைபெறும் சம்பவங்கள், பொதுவாகவே அனைத்து மக்களையும் முகம் சுளிக்க வைக்கிறது. காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் பயணிக்கும் இடமாக பூங்காவும், கடற்கரையும் இருந்து வருகிறது.
இந்நிலையில் நாளை கொண்டாடவிருக்கும் காதலர் தினத்தன்று குஜராத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரு உறுதிமொழி எடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் தங்களுடைய வாழ்க்கை துணையை தாங்களாகவே தேர்ந்தெடுக்காமல் தங்களது பெற்றோர்களின் விருப்பப்படியே வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்போம் என உறுதிமொழி எடுக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியானது சூரத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹஸ்யமேவ ஜெயதே என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்படுகிறது. இதுகுறித்து கருது தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைவர் கமலேஷ் மசாலாவால, "இந்த முயற்சியானது பெற்றோர்களின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது. பிப்ரவரி 14ம் தேதி சூரத்தில் உள்ள 12 பள்ளி மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் இதுகுறித்து உறுதிமொழி எடுக்க உள்ளனர்" என கூறியுள்ளார்.