மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் மரணம், 1 குழந்தை உட்பட 11 பேர் காயம்..!
மதவழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் மரணம் ஒரு குழந்தை உட்பட 11 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, பாகிஸ்தானின் பெஷாவர் மகாணம் லாகி மாவட்டம் இசக் ஹெல் பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் எப்பொழுதும் போல் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றுள்ளது.
இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் கலந்துகொண்டனர். வழிபாடு முடிந்தவுடன் அங்கு அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர், அப்போது அவர்கள் பகுதியில் ஏற்பட்டுவரும் தொடர் மின் வெட்டு குறித்து சிலர் பேசினர். அப்போது, இரு தரப்பினர் இடையே அது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் ஒருவரை ஒருவர் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து, மத வழிபாட்டு தலத்தில் இருந்து அலறியடித்து ஓடினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஆறு வயது குழந்தை உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.