மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடல் ஆமை சாப்பிட்ட 8 குழந்தைகள் பலி.!
தான்சானியா நாட்டில் கடல் ஆமை சாப்பிட்ட 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியா நாட்டின் ஜஞ்சிபார் என்ற பகுதிக்கு உட்பட்டது பெம்பா தீவு. இங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடல் ஆமை கறி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதில் முதியவர்கள் 78 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது மருத்துவ அதிகாரி கூறியதாவது, உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 78 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான்சானியா நாட்டின் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மாஃபியா தீவில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.