ஹமாஸ் குழுவுக்கு ஆதரவு; அமெரிக்காவில் உயர்கல்வி வாய்ப்பை இழந்து வெளியேறிய இந்திய மாணவி.!



a-us-india-student-ranjini-srinivasn-left-us-support-ha

இஸ்ரேல் நாட்டின் மீது படையெடுப்பு தாக்குதல் ஹமாஸ் குழுவினர் தேடித்தேடி வேட்டையாடப்படுகின்றனர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில், பாலஸ்தீனம் தனது வரலாற்றில் எழுந்து வர இயலாத அளவு மரண அடி கொடுக்கப்பட்டுவிட்டாலும், இஸ்ரேல் ஹமாஸ் படையினரை தீர்த்துக்கட்டும் எண்ணத்துடன் போரை தொடருகிறது.

அமெரிக்கா இவ்விசயத்தில் நேரடியாக தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் படையினருக்கு இடையேயான போர் விவகாரத்தி, ஹமாஸ் படைக்கு ஆதரவு தெரிவித்த, இந்திய ஆராய்ச்சி மாணவியின் விசா அமெரிக்கா அரசால் ரத்து செய்யப்பட்டு, அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: நாங்கள் அமைதியை விம்புகிறோம் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.. அமைதி பேச்சுவார்த்தைக்கு பச்சைக்கொடி.!

அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலை.,யில் நகர்ப்புற திட்டமிடல் துறையில், இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசன் எப்1 விசா பெற்று பட்டம் பயின்று வந்துள்ளார். இவர் இஸ்ரேல் நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்று, ஹமாஸ் படைக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தார்.

ஹமாஸ் அமைப்பு பயங்கரவாத செயல்பாடு காரணமாக அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக இருந்த அவரின் விசா ரத்து செய்யப்பட்டது. அதிகாரிகள் அவரை நாடுகடத்தும் செயலில் அதிகாரிகள் இறங்கிய நிலையில், அவர் தாமாக முன்வந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: குச்சி ஐஸ் பிரியர்களுக்கு ஷாக் செய்தி.. ஐஸ்கிரீமில் உறைந்துபோன குட்டி பாம்பு..! நல்ல வேலை சாப்பிடல..