என்னது குழந்தை பெற்று கொண்டால் 5 லட்சம் பணமா... எங்கு தெரியுமா.?



Chinna private industry give 5 lakh cash pack for labours

சீனாவில் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தை அதிகரிக்க அரசும், மாகாண அரசும் பல்வேறு சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி சீன அரசின் அறிவுறுத்தலின் படி தனியார் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு நிறுவனம் அறிவித்த அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் டிரிப் டாட் காம் குரூப் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 1.13 லட்சம் ஊக்க தொகையாக வழங்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் லியாங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊக்க தொகையானது குழந்தை பிறந்தது முதல் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஒரு ஊழியர் எத்தனை குழந்தை வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். அத்தனை குழந்தைக்கும் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஊக்க தொகை வழங்கப்படும் என ஜேம்ஸ் கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு குழந்தைக்கு ஐந்து ஆண்டுகளில் 5.65 லட்சம் ஊக்க தொகை கிடைக்க பெறுகிறது என தெரிவித்துள்ளார்.