96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கோர விபத்து.. நைஜீரியாவில் அரசு ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்தின் மீது அதிவேக ரயில் மோதி விபத்து.. பலி எண்ணிக்கை 6 அதிகரிப்பு..!
நைஜீரியாவில் பேருந்து ஒன்று அரசு ஊழியர்களை ஏற்றுக்கொண்டு சென்றது. அந்தப் பேருந்தானது லாகோஸ் நகரில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயற்சி செய்யும்போது அதிவேகமாக வந்த ரயில் ஒன்று அந்த பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் பேருந்தானது பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். மேலும் 84 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் சிக்னலை கவனிக்காமல் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயற்சிக்கும்போது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.