#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை; வெளியான பரபரப்பு சம்பவம்.!
பெண் ஆராய்ச்சியாளர் ஒருவரை முதலை ஒன்று உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் சுலவேசி பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. இங்கு பல உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அதில் 17 அடி நீளமுள்ள முதலையும் ஒன்று.
சம்பவம் நிகழ்ந்த அன்று பெண் ஆராய்ச்சியாளர் டேசி டூவோ வழக்கம்போல் முதலைக்கு உணவளிக்க சென்றுள்ளார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அந்த முதலை சுமார் 8 அடி வரை பாய்ந்து டேசி டூவோவை விழுங்கியது.
இதனை நேரில் கண்ட அவரது தோழி, முதலை அவரை விழுங்கும் போது பாதி நிலையில்
தான் பார்த்தேன். அதன் பிறகு தடுக்க முயன்றோம், ஆனால் அதன் அருகில் செல்ல இயலாததால் அவரை முழுவதுமாக விழுங்கியது. அதனால் அவரை காப்பாற்ற இயலவில்லை என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதனால் முதலைக்கு விரைவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் விலங்கு நல ஆர்வலர்கள் பலர், முதலையிடம் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். இதனால் முதலைக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பது தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.