#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீனாவில் நிலச்சரிவு.. தங்க சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்.. மீட்பு பணிகள் தீவிரம்..!
வடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் தங்க சுரங்க தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கஜகஸ்தான் எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த தங்க சுரங்க தொழிற்சாலை.
இந்நிலையில் அந்த தங்க சுரங்க தொழிற்சாலையில் 40 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் அதில் சிக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் 22 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
மேலும் சீனாவில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படாத காரணத்தால் சுரங்க விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.