அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
ஒரே இடத்தை வட்டமடிக்கும் யானைகள்.! முகம் தரையில் படுமாறு குப்புற விழுந்து மரணமடைந்த 350 யானைகள்.! ஆய்வில் வெளியான அதிர்ச்சி.!
போட்ஸ்வானா. இது தென்னாபிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு நாடு. கடுமையான காடுகளை காந்த இந்த பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. இந்த காட்டின் ஒகவாங்கோ (Okavango) எனப்படும் கழிமுக பகுதியில் பிரிட்டனைச் சேர்ந்த வனவிலங்கு மீட்பு அறக்கட்டளை ஒன்று சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அந்த ஆய்வில் கடந்த இரண்டு மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இறந்துகிடந்த யானைகளின் தந்தங்கள் வெட்டப்படவில்லை என்பதால் யானைகள் வேட்டையாடப்படவில்லை என்பதும் உறுதியாக தெரிகிறது.
அதேநேரம் இறந்து கிடந்த யானைகள் பெரும்பாலும் முகம் தரையில் படுமாறு குப்புற விழுந்து உயிரிழந்துள்ளன. பெரும்பாலான யானைகள் இவ்வாறு இறந்துகிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அந்த பகுதியில் உயிருடன் உலா வரும் சில யானைகள் ஒரே இடத்தை வட்டமடித்தவாறு சுற்றிவருகிறதாம்.
இது யானைகளின் நரம்பு மண்டலம் தாக்கப்பட்டதற்கான அறிகுறி என்றும், இறந்த யானைகளின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்தால் தான் அவை இறந்ததற்கான உண்மையான காரணம் குறித்து தெரிய வரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.