மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிறைமாத கர்ப்பிணியின் சிசு கொலை.. தலையை தனியே எடுத்து மருத்துவ பணியாளர் வெறிச்செயல்..!
நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து, குழந்தையின் தலையை வெட்டி கருப்பையில் வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணம் தர்பார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சனா குமரி (வயது 32). இவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். அவர் தற்போது 10 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர் இல்லை என்று தெரியவருகிறது. அங்கிருந்த மருத்துவ ஊழியர் அவருக்கு பிரசவம் பார்த்த நிலையில், கருப்பையில் இருக்கும் குழந்தை வெளியே எடுக்கும் போது அதன் தலையை வெட்டிவிட்டதாக தெரிய வருகிறது.
தலையை கருப்பையில் வைத்துவிட்டு குழந்தையின் உடலை மட்டும் வெளியே எடுத்துள்ளார். இதனால் சனாகுமாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு குழந்தை குறித்த விஷயம் வெளியே வரவே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் விரைந்து விசாரணை நடத்தி மருத்துவ ஊழியரை கைது செய்ய முயற்சித்த நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் மீது இன ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இதுபோன்ற கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.