மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களுக்காக எனது ஆடைகளை விற்றாவது.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதிமொழி.!
உக்ரைன் ரஷ்யா இடையேலான போர் மற்றும் உலகளவில் அதிகரிக்கும் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பல்வேறு நாடுகள் உணவு தானிய தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் ஆகிய நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
அந்தவகையில், இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கைபர் பாக்துன்குவா மாகாணத்தில் கோதுமை விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அந்நாட்டின் கைபர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ், கைபர் மாகாணத்தின் முதலமைச்சரான மஹ்மூத் கான் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கோதுமை விலையை குறைக்க வேண்டும். 10 கிலோ கோதுமை மாவை ரூ.400க்கு விற்க வேண்டும். இல்லை என்றால் எனது உடைகளை விற்றாவது மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை கிடைக்க ஏற்பாடு செய்வேன். இதை நான் அழுத்தமாகக் கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார்.