அடடே.. மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியில் இருந்து விடுதலை.. பிரத்தியேக ஆடையை வடிவமைத்த மங்கை.!



Periods Pain Body Suite Discovered by Hungary Women

 

ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் வசித்து வரும் பௌலா என்ற பெண்மணி, தனது மாதவிடாய் நாட்களின் போது ஏற்பாடு வலியால் கடுமையாக அவதிப்பட்டுள்ளார்.  இதனால் அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வ இயக்கத்தை தோற்றுவித்து, மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்கும் ஆடையை கண்டறிய திட்டமிட்டுள்ளார். 

இதனையடுத்து, ஆடை உருவாக்கப்பட்டு 250 க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து சோதனை நடத்தி, விரைவில் அது சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதை அவர் தெரிவித்துள்ளார். 

ஆர்ட்டெமிஸ் என்று அழைக்கப்படும் பாடிசூட், வெப்ப அலைகள் மற்றும் ஜெல் பட்டைகள் மூலமாக செய்லபடுகிறது. டேன்ஸ் ஜெல் பட்டைகள் பிரசவத்தின்போது பெண்களுக்கு உபயோகம் செய்யப்படும் நிலையில், அதனை வைத்து மாதவிடாய் வலியை குறைக்க ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது.

periods

இவை நமது மாதவிடாய் வலியை மூளைக்கு அளிக்கும் தகவலை துண்டித்து, வெப்ப பேனல்கள் கருப்பை மற்றும் அதன் தசைகளை இலகுவாக மாற்றுகிறது. இது சோதனையிலும் வலியில்லா மாதவிடாயை ஏற்படுத்தி உறுதி செய்துள்ளது. 

இது சந்தையில் 200 யூரோவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.19 ஆயிரம்) விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. கடுமையான வலியை மாதவிடாய் நாட்களில் அனுபவிக்கும் பெண்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அவ்வப்போது மகப்பேறு மருத்துவரை சந்தித்து சோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.