மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி.. அமெரிக்காவில் இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை..!
அமெரிக்காவில் வட இந்தியாவை சேர்ந்த ஆதித்யா அட்லாகா என்ற மாணவர் சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு முனைவர் பட்டமேற்படிப்பு பயின்று வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று தனது காரில் சின்சினாட்டியில் உள்ள வெஸ்டர்ன் ஹில்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் கார் கண்ணாடியை துளைத்துக் கொண்டு சென்ற குண்டுகள் அவர் மீது பாய்ந்ததில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த சுவரில் மோதி கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ஆதித்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆதித்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.