மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகன் கண் முன்னே நடந்த பயங்கரம்!!,, இறுதியில் நடந்த துணிகரம்!!: அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
பெற்றோர், மகன் கண் முன்னே மாறி, மாறி துப்பாக்கியால் சுட்டு கொண்டதில் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இருக்கும் ஷகாப் கேல் பகுதியை சேர்ந்தவர் பக்ஷீஷ். இவரது மனைவி மிஸ்மா. இவர்களது மகன் கான் ஜயீப். இவர்களுக்கு திருமணம் நடந்து 25 வருடங்கள் ஆகிறது.
சமீபத்தில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை திடீரென தனது மனைவி மிஸ்மாவிடம் கணவர் பக்ஷீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் அவரிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மிஸ்மாவை நோக்கி சுட்டு உள்ளார்.
இதைத் தொடர்ந்து படுகாயமடைந்த மிஸ்மா பக்கத்து அறைக்கு சென்று மற்றொரு துப்பாக்கியை எடுத்து வந்து கணவரை திருப்பி சுட்டு உள்ளார். இதில் பக்ஷீஷ் உயிரிழந்தார். தாய் மிஸ்மாவை ஜயீப் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றரார். ஆனால் படுகாயமடைந்த மிஸ்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டதில் மரணங்கள் நடந்து உள்ளன என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும், தனது தாயை சுட்ட அதிர்ச்சியில், பழி வாங்க தனது தந்தையை ஜயீப் சுட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.