மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சாகச வீராங்கனையுடன் உல்லாச உறவில் ஈடுபட விரும்பினார்..! வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் சாகச வீராங்கனை ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக அந்நாட்டின் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் புகார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் அலி சலீம் என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, சாகச வீராங்கனை சின்தியா ரிச்சி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழல் வந்ததாகவும், அப்போது தன்னுடன் உறவில் ஈடுபட முடியுமா என பிரதமர் சின்தியா ரிச்சியிடம் கேட்டதாகவும், இதனை அவர் தன்னிடம் கூறியதாகவும் அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
அதே நேரம், பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக வீராங்கனை சின்தியா ரிச்சி பேசும்போது, கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜனாதிபதி அரண்மனையில் வைத்து தன்னை பாலியல் கொடுமை செய்ததாகவும், முன்னாள் பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், சின்தியா ரிச்சி கூறும் அனைத்தும் பொய் எனவும், ஆதாரமற்றவை எனவும் கூறியுள்ளார்.