#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அழகோ அழகு.... சிலை உச்சியிலிருந்து மின்னல் வேகத்தில் பறந்து வரும் வெள்ளை நிற மயில்...! வைரலாகும் வீடியோ காட்சி...
வெள்ளை நிற அழகிய மயில் ஒன்று மேலே இருந்து பறந்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளை குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். இந்த குறிப்பிட்ட வீடியோவில், இத்தாலியின் ஸ்ட்ரெசாவிற்கு அருகில் உள்ள ஐசோலா பெல்லாவில் உள்ள பூங்கா தோட்டத்தில் உள்ள சிலை ஒன்றின் உச்சியிலிருந்து வெள்ளை நிற மயில் ஒன்று பறந்து வந்து தரையில் நிற்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பார்ப்போரை வியக்கவைத்துள்ளது.
மேலும் இந்த வகையான வெள்ளை மயில்கள் லூசிசம் மரபணுமாற்றம் பெற்ற நீலமயில்களின் துணை இனமாம். இந்த மயில்கள் பிறக்கும் போது மஞ்சள் நிறத்திலும், வளர வளர இந்த வகையான மயில்கள் வெள்ளை நிறமாக மாறுகின்றன. இதோ அந்த வீடியோ காட்சி...
White peacock in flight..🦚😍 pic.twitter.com/CnBNbSoprO
— 𝕐o̴g̴ (@Yoda4ever) April 29, 2022